Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 16 on Wed Oct 29, 2014 4:05 pm
Most active topic starters
birundha
 
Admin
 


வெண்டைக்காய் தயிர்ப் பச்சடி

Go down

வெண்டைக்காய் தயிர்ப் பச்சடி

Post by birundha on Fri Jun 27, 2014 5:35 pm

வெண்டைக்காய் சாப்பிட்டா ஞாபகசக்தி அதிகரிக்கும்னு சொல்லுவாங்க. சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!Wink Wink உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் ஒரு சுவையான ரெசிப்பி இது. பொதுவா வெண்டைக்காயை வதக்கறதுதான் கொஞ்சம் நச்சுப் புடிச்ச வேலை. இந்த ரெசிப்பியில் அதுக்கு ஒரு ஈஸி டெக்னிக் சொல்லிருக்கேன், ட்ரை பண்ணிப் பாருங்க!

தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்-10
வெங்காயம்(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை-1கொத்து
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு-1 டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
உப்பு

செய்முறை
வெண்டைக்காய்-வெங்காயம்-பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் நறுக்கிய வெண்டைக்காய்த் துண்டுகளை (ஒவ்வொன்றாக இருக்கும்படி) பரப்பி, 300F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 10 நிமிடங்கள் bake செய்யவும். ட்ரேயை வெளியே எடுத்து வெண்டைக்காய்த் துண்டுகளை திருப்பிவிட்டு மீண்டும் 6-7 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். காய் மொறுமொறுப்பாய் வெந்திருக்கும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பேக் செய்த வெண்டைக்காய்களை சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி ஆறவிடவும்.

தயிருடன் கொஞ்சமாக(காயில் உப்பு சேர்த்திருக்கோம்,கவனமாப் போடுங்க) உப்பு சேர்த்து கடைந்துவைக்கவும். சாப்பிடும் முன்பு தயிருடன் வெண்டைக்காய்க் கலவையைக் கொட்டி கலந்து விடவும்.

சுவையான வெண்டைக்காய் தயிர்ப்பச்சடி ரெடி. வெண்டைக்காயை தயிருடன் கலந்தவுடன் பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தாளிதம் செய்த பருப்புகள்-வெண்டைக்காய் எல்லாம் தயிரில் ஊறிப்போய்விடும். அதனால் பரிமாறுமுன் கலந்து பரிமாறுங்க.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum