Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 16 on Wed Oct 29, 2014 4:05 pm
Most active topic starters
birundha
 
Admin
 


மட்டன் கைமா

Go down

மட்டன் கைமா

Post by birundha on Tue Jul 01, 2014 4:29 pm

தேவையானப் பொருட்கள்



கொத்துக்கறி-அரைக் கிலோ
வெங்காயம்-நான்கு
பச்சைமிளகாய்-ஆறு
இஞ்சி-ஒரு துண்டு
பூண்டு-ஆறு பற்கள்
கடலைப் பருப்பு-ஒரு கோப்பை
முட்டை-ஆறு
தேங்காபூ-அரைக் கோப்பை
மிளகாய்த்தூள்-அரைதேக்கரண்டி
மஞ்சத்தூள்-அரைதேகரண்டி
மிளகுத்தூள்-அரைதேக்கரண்டி
கடுகு-அரைதேக்கரண்டி
சோம்பு-அரைத்தேக்கரண்டி
பட்டை-இரண்டு துண்டு
கிராம்பு-நான்கு
ஏலக்காய்-நான்கு
கறிவேப்பிலை-பத்து
கொத்தமல்லி-ஒரு பிடி
உப்பு-இரண்டு தேக்கரண்டி
எண்ணெய்-அரைக்கோப்பை
செய்முறை



கொத்துக்கறியையும், ஊறவைத்த கடலைபருப்பையும் அரைத்தேக்கரண்டி உப்புத்தூளை போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை மெல்லியதாக அரிந்துவைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டுடன் வாசனை போருட்களை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி மிளகுத்தூள்,உப்புத்தூள்,மஞ்சத்தூளை போட்டு நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை போட்டு பொரிந்ததும் சோம்பை போட்டு தொடர்ந்து வெங்காயம் பச்சைமிளகாயை போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு அரைத்துள்ள விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.தொடர்ந்து மீதமுள்ள உப்புத்தூள்,மிளகாய் தூளை போட்டு வதக்கி வேகவைத்துள்ள கறி கலவையை கொட்டி கிளறவும்.
தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் அடித்துவைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக கிளறி முட்டை உதிரி உதிரியாகும் வரை கிளறி விடவும்.
பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காபூவைப் போட்டு நன்கு கிளறிவிட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum