Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ஈரல் கிரேவி
Page 1 of 1
ஈரல் கிரேவி
தேவையானப் பொருட்கள்
ஈரல் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகு விழுது – ஒரு தேக்கரண்டி
சீரக விழுது – ஒரு தேக்கரண்டி
தேங்காய் விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
நறுக்கிய கொத்தமல்லித் தழை – கால் கப்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
சீரகத் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
பட்டை – 2 துண்டு
எண்ணெய் – கால் கப்
செய்முறைமுதலில் ஈரலை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு விழுது, சீரக விழுது, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தேங்காய் விழுது ஆகியவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லியை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து தூள்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் ஈரலை போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது, சீரகத் தூள், சோம்பு தூள், அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூடி போட்டு 3 விசில் விட்டு வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்து, பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதன் பின்னர் மிளகு விழுது, சீரக விழுது போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.
ஒரு நிமிடம் கழித்து தேங்காய் விழுது, மிளகாய் தூள் போட்டு மேலும் ஒரு நிமிடம் கிளறவும். பின்பு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
அதன் பின்னர் வேக வைத்த ஈரலை போடவும். ஈரல் வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடாமல் மசாலா கலவையில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும். இடையில் கிளறி கொண்டே இருக்கவும்.
பின்னர் 2 நிமிடம் கழித்து கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து சுமார் 8 நிமிடங்கள் வேக விடவும்.
8 நிமிடம் கழித்து சற்று கெட்டியாக ஆனதும் மேலே நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும்.
ருசியான ஈரல் கிரேவி ரெடி. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha