Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பச்சை பட்டாணி-காளான் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 10 users online :: 0 Registered, 0 Hidden and 10 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பச்சை பட்டாணி-காளான் குழம்பு Vote_lcapபச்சை பட்டாணி-காளான் குழம்பு Voting_barபச்சை பட்டாணி-காளான் குழம்பு Vote_rcap 
Admin
பச்சை பட்டாணி-காளான் குழம்பு Vote_lcapபச்சை பட்டாணி-காளான் குழம்பு Voting_barபச்சை பட்டாணி-காளான் குழம்பு Vote_rcap 


பச்சை பட்டாணி-காளான் குழம்பு

Go down

பச்சை பட்டாணி-காளான் குழம்பு Empty பச்சை பட்டாணி-காளான் குழம்பு

Post by birundha Thu May 22, 2014 3:40 pm

பச்சை பட்டாணி-காளான் குழம்பு
தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்
காளான் - 250 கிராம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி - 7-8
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை பட்டாணியைப் போட்டு, நன்கு 10-15 நிமிடம் பட்டாணி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும், எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க பச்சை பட்டாணி காளான் குழம்பு தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum