Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி அவல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி அவல் Vote_lcapதக்காளி அவல் Voting_barதக்காளி அவல் Vote_rcap 
Admin
தக்காளி அவல் Vote_lcapதக்காளி அவல் Voting_barதக்காளி அவல் Vote_rcap 


தக்காளி அவல்

Go down

தக்காளி அவல் Empty தக்காளி அவல்

Post by birundha Sun May 25, 2014 4:40 pm

தக்காளி அவல்

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்
தக்காளி - 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
கேரட் - 1 சிறியது
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 மூடி

செய்முறை:

* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

* பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.

* சுவையான தக்காளி அவல் தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum