Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
சத்தான முட்டைக்கோஸ் சட்னி
Page 1 of 1
சத்தான முட்டைக்கோஸ் சட்னி
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - கால் கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி - 1/2 இன்ச்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்) துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தாளிப்பதற்கு :
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
• முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
• பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கி பின் அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி ஆற வைக்க வேண்டும்.
• நன்கு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
• மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்பு அதனை அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைக்கோஸ் சட்னி ரெடி!!!
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha