Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவல் கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவல் கிச்சடி Vote_lcapஅவல் கிச்சடி Voting_barஅவல் கிச்சடி Vote_rcap 
Admin
அவல் கிச்சடி Vote_lcapஅவல் கிச்சடி Voting_barஅவல் கிச்சடி Vote_rcap 


அவல் கிச்சடி

Go down

அவல் கிச்சடி Empty அவல் கிச்சடி

Post by birundha Wed Apr 16, 2014 10:55 am

அவல் கிச்சடி


தேவையானப் பொருள்கள்:

அவல்- 2 கப்
பச்சைப்பட்டாணி-ஒரு கைப்பிடி
கேரட்-1/4 பாகம்
காலிஃப்ளவர்-கொஞ்சம்
சின்ன வெங்காயம்-10
தக்காளி-பாதி
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
பூண்டு-2 பற்கள்
பச்சை மிளகாய்-2
மஞ்சள் தூள்-சிறிது
உப்பு-தேவைக்கு
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
எலுமிச்சை சாறு-1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு-2
பிரிஞ்சி இலை-1
கறிவேப்பிலை

செய்முறை:

* பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.

* அவல் நன்றாக ஊறி இருக்க வேண்டும்.ஆனால் குழைந்து இருக்கக்கூடாது.

* கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

* இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு இஞ்சி, பூண்டு வதக்கிவிட்டு அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். அடுத்து கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.

• காய்கள் நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

* காய் வெந்ததும் அவலைக்கொட்டிக் கிளறவும். தண்ணீர் சேர்க்க கூடாது.

* உப்பு தேவையானால் சேர்த்துக்கொள்ளவும்.

* மிதமானத்தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

* பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum