Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் - பட்டர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் - பட்டர் சிக்கன் Vote_lcapசிக்கன் - பட்டர் சிக்கன் Voting_barசிக்கன் - பட்டர் சிக்கன் Vote_rcap 
Admin
சிக்கன் - பட்டர் சிக்கன் Vote_lcapசிக்கன் - பட்டர் சிக்கன் Voting_barசிக்கன் - பட்டர் சிக்கன் Vote_rcap 


பட்டர் சிக்கன்

Go down

சிக்கன் - பட்டர் சிக்கன் Empty பட்டர் சிக்கன்

Post by birundha Mon Apr 21, 2014 3:41 pm

சிக்கனும் பட்டருமா..?! அட ஆமாங்க! ஆளையே மயக்கும் அதன் சுவையும் மணமும், பார்த்தவுடனே ஒரு பிடி பிடிக்கணும் போல இருக்கும். ஒல்லியா இருக்கிறவங்க ஆசை தீர சாப்பிடுங்க… குண்டாயிருக்குறவங்க ஆசைக்கு மட்டும் சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு கண்டிஷனே இல்ல.. இஷ்டம் போல உண்டு மகிழலாம்…….
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)
பூண்டு  – 3
பல்லாரி – 2
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 5
மல்லித்தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் – டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
புதினா – 10 இலைகள்
மல்லித்தழை – 1 கொத்து
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

* நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

* நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீ­ர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீ­ர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.)

* சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்­ணீரை வற்ற விடவும்.

* சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.

* வெண்ணெயை கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

* கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்.

* வெண்ணெயுடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

* வெண்ணெயில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடிபிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum