Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
முட்டை கூட்டு
Page 1 of 1
முட்டை கூட்டு
தேவையான பொருட்கள்
அவித்த முட்டை – 4
வெங்காயம்(நறுக்கியது) – 1கப்
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 3
தக்காளி (நறுக்கியது) – 1 கப்
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும். பின்னர் சீரகம், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். அதோடு சீவி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கிளறவும். இப்போது கொத்தமல்லித்தூள் வற்றல் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். அரை கப் தண்ணீர் ஊற்றி மெதுவாக கிளறவும். இப்போது உப்பு சேர்க்கவும்
இது கொதிக்கத் தொடங்கியதும் முட்டையை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் கொதிக்கும் மசாலாவோடு சேர்க்கவும். முட்டையின் மஞ்சள் கரு உடையாதபடி மெதுவாக கலக்கவும்.
கொத்தமல்லி இலைகளைத் தூவி முட்டை கூட்டை அலங்கரித்து சூடாக பரிமாறவும். இது சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற கூட்டு வகையாகும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha