Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  Vote_lcapசங்கரா மீன் தலை சூப்/ரசம்  Voting_barசங்கரா மீன் தலை சூப்/ரசம்  Vote_rcap 
Admin
சங்கரா மீன் தலை சூப்/ரசம்  Vote_lcapசங்கரா மீன் தலை சூப்/ரசம்  Voting_barசங்கரா மீன் தலை சூப்/ரசம்  Vote_rcap 


சங்கரா மீன் தலை சூப்/ரசம்

Go down

சங்கரா மீன் தலை சூப்/ரசம்  Empty சங்கரா மீன் தலை சூப்/ரசம்

Post by birundha Fri May 16, 2014 3:56 pm


சங்கரா மீன் தலை சூப்/ரசம்
Red Snapper Soup – Step by Step
மீன் வாங்கினால் நல்ல உப்பு, புளி, காரமாக சுல்லுன்னு சால்னா மற்றும் ஃப்ரை என்று செய்வேன்.

இப்ப இங்கு குளிர் அதிகமாக இருப்பதால் சங்கரா மீன் தலை சூப் செய்துள்ளேன். இது கடுஞ்சளி பிடித்து இருந்தால் இது போல் சூப் வகைகளை சாப்பிட்டால் கொஞ்சம் குணமாகும்.

முக்கியமாக இது பிள்ளை பெற்றவர்களுக்கு , பிரசவம் ஆனதும் 40 நாட்கள் மதியவேலைகளில் மட்டன் போன் சூப், சிக்கன் போன் சூப் என்று செய்து கொடுப்போம், ஒரே அதையே சாப்பிட்டு சலித்து போய்விடும் அதுக்கு தான் இடையில் சங்கரா மீன் , காரப்பொடி மீன் சூப் என்று செய்து கொடுப்போம்.
இதை குடித்தால் தாய் மார்களுக்கு நன்கு பால் சுரக்கும்..

இதை அறுசுவை டாட் காமில் 2008 காரப்பொடி மிளகு சூப். குழம்பு என கொடுத்துள்ளேன்,கைவசம் காரப்பொடி மீன் இல்லை ஆகையால் சங்கராமீன் தலையில் செய்துள்ளேன்.


மொத்தம் மூன்று பெரிய சங்கரா மீன் தலையை சூப் வைத்து விட்டு மிதியல் துண்டுகளாக போட்டுமசலா தடவி பொரித்து கொள்ளலாம்.




பரிமாறும் அளவு : முன்று நபர்களுக்கு
தேவையானவை
சங்கரா மீன் தலை - மூன்று
வேக வைக்க:
வெங்காயம் – ஒன்று
தக்காளி – அரை
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
தனியா துள் – ஒரு தேகரண்டி
சீரக தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – அரை டம்ளர்
இஞ்சி பூண்டு – கால் தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
நெய் – அரை தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
பூண்டு – நான்கு பல் (தட்டிக்கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு











காரப்பொடி மீனை சுத்தம் செய்து கொள்ளவும். அதில் வேகவைக்க வேண்டியவைகளை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக விடவும். மூடி போட்டால் பொங்கும் லேசாக மூடி வைக்கவும்.



பிறகு தாளிக்க வேண்டியவைகளை ஒன்று சேர்த்து லேசாக ஒன்றும் பாதியுமாக தட்டி தாளித்து குழம்பில் கொட்டவும்.






சுவையான சங்கரா மீன் சூப்/ரசம் தயார்.
குறிப்பு: சின்ன வெங்காயத்துக்குபதில் பெரிய வெங்காயமும் சேர்த்துகொள்ளலாம், சளி தொல்லைக்கு சின்ன வெங்காயத்தை நெயில் வறுத்து சாப்பிடலாம், அதற்காக இப்ப நான் தாளிக்கும் போது சின்ன வெங்காயத்தை தட்டி தாளிப்பது ருசியும் மிக அருமையாக இருக்கும்.



மற்றொரு முறை குழந்தைகளுக்காக
Red Snapper Soup. For kids

மீன் கொதிக்கும் போது மீனை நன்கு உடைத்து விட்டு வேகவைக்கவும்.

வெந்து இரக்கும் சமையம் நன்கு கரண்டியால்மசித்து பெரிய துளை உள்ள வடிகட்டியில் வடிக்கவும். பிறகு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.


மீன் முள்ளுடன் சாப்பிடும் போது நல்ல வெளிச்சமான இடத்தில் பொறுமையாக முள் எடுத்து சாப்பிடனும் இல்லை என்றால் தொண்டையில் சிக்கி விபரீதமாகிவிடும்.
இந்த டிப்ஸையும் பாருங்கள் - தொண்டையில் முள் குத்தி விட்டால் .அபாயம்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum