Search
Latest topics
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests :: 1 BotNone
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
கோழிப் பொரியல்
Page 1 of 1
கோழிப் பொரியல்
தேவையானப் பொருட்கள்
சிக்கன் – 150 கிராம்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – அரை அங்குலத் துண்டு
பூண்டு – 7 பல்
புதினா – 2 கொத்து
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – அரை தேக்கரண்டி
செய்முறை:
பெரிய வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலும்பில்லாத கோழி கறியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் தண்ணீர் ஊற்றி, அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு போட்டு, கோழித்துண்டங்களையும் சேர்க்கவும்.
கோழிக்கறியை சுமார் 8 நிமிடங்கள் வேகவிடவும். தண்ணீர் நன்கு சுண்டி வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
கறி வெந்ததும் எடுத்து எலும்பில்லாமல் உதிர்த்து ஆற விடவும். ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் தூளாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அத்துடன் புதினா, கறிவேப்பிலை போட்டு 30 நொடி வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து அதில் பொடியாய் அரைத்து வைத்துள்ள கோழி இறைச்சியை போட்டு மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா போட்டு 4 நிமிடம் வதக்கவும்.
4 நிமிடம் கழித்து மேலே ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மேலும் 2 நிமிடம் பிரட்டிவிட்டு பின்னர் இறக்கவும்.
தேவைப்பட்டால் இறக்குவதற்கு சற்று முன்பு, கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மேலே தூவி இறக்கவும். இந்த கோழிப் பொரியலை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. உமாதேவி குணசேகரன் அவர்கள்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha