Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா Vote_lcapசிக்கன் ஸ்டஃப்டு பராத்தா Voting_barசிக்கன் ஸ்டஃப்டு பராத்தா Vote_rcap 
Admin
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா Vote_lcapசிக்கன் ஸ்டஃப்டு பராத்தா Voting_barசிக்கன் ஸ்டஃப்டு பராத்தா Vote_rcap 


சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா

Go down

சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா Empty சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா

Post by birundha Fri May 09, 2014 4:06 pm


எலுமில்லாத கோழி கறி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
சாம்பார் தூள் (அ) மிளகாய் தூள் + தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கு
கோதுமை மாவு – முக்கால் பாகம்
மைதா மாவு – கால் பாகம்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
மஞ்சள் தூள்
உப்பு



மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.


பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.


இதில் தூள் வகைகளைச் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு தூள் வாசம் போக வதக்கவும்.


தூள் வாசம் போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து வதக்கி இறக்கவும்.


பிசைந்து வைத்துள்ள மாவில் சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும்.


அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டி விட்டு தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.

roddi
சுவையான சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா தயார்.

இதில் மைதா அவசியமில்லை. கோதுமையை மட்டும் பயன்படுத்தலாம். கொஞ்சம் சாஃப்ட்னஸ் கிடைப்பதற்காக தேவையென்றால் மைதா சேர்க்கலாம். விட்டு போகாமல் இருக்கும். இதில் வெறும் வேக வைத்த சிக்கனுக்கு பதிலாக சிக்கன் ஃப்ரை, தந்தூரி சிக்கன் போன்றவையும் உதிர்த்து சேர்க்கலாம். அப்படி சேர்க்கும் போது மசாலா அவற்றுக்கு ஏற்றபடி மாற்ற வேண்டி வரும். இரண்டு சப்பாத்தியாக செய்யாமல் வழக்கமான ஸ்டஃப்டு சப்பாத்தி போல் உள்ளே வைத்து மூடி மீண்டும் தேய்த்தும் செய்யலாம். இப்படி இரண்டாக வைப்பதால் உள்ளே அதிக அளவு கறி வைத்து திக்காக செய்ய இயலும். ஒன்று செய்தாலே லன்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விட போதுமானதாக இருக்கும். வேக வைக்காமல் நேரடியாகவும் சிக்கன் சேர்க்கலாம். சேர்த்த பின் வேக விடலாம். இன்னும் சுவை கூட்ட சிக்கன் வெந்ததும் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum