Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கொத்து இடியாப்பம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கொத்து இடியாப்பம் Vote_lcapகொத்து இடியாப்பம் Voting_barகொத்து இடியாப்பம் Vote_rcap 
Admin
கொத்து இடியாப்பம் Vote_lcapகொத்து இடியாப்பம் Voting_barகொத்து இடியாப்பம் Vote_rcap 


கொத்து இடியாப்பம்

Go down

கொத்து இடியாப்பம் Empty கொத்து இடியாப்பம்

Post by birundha Tue Apr 22, 2014 3:23 pm

நூடுல்ஸ் சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை அவஸ்தைகளுக்கு அடகு வைத்தவரா நீங்கள்…… இதோ! உங்களுக்காக சத்தான நம்ம ஊர் ஸ்பெஷல் நூடுல்ஸ் ரெடி. அட இது நம்ம ‘இடியாப்பமா’னு ஆச்சர்யப்படும் அளவிற்கு நாவில் ஒட்டிக்கொள்ளும் இதன் சுவை…!

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் (உதிரியானது) – 2 கப்
வேக வைத்த நாட்டுக் காய்கறிகள் (கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு) – தலா 50 கிராம்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டேபிள் டீஸ்பூன்
சோம்புத் தூள் – 1\2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 50 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி – 2
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

* கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.

* பிறகு தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

* சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.

* காய்கறிகளை வேக வைத்த தண்­ணீருடன் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தண்­ணீர் வற்ற நன்கு வேக விடவும்.

* தண்ணீ­ரே தெரியாமல், எண்ணெய் கக்கும் அளவுக்கு வந்ததும், இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.

* குறைந்த தணலில் வைத்து, ஒரு கைப்பிடி தண்ணீ­ர் தெளித்துக் கிளறவும் (இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீ­ர் தெளிக்க வேண்டும்).

* 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து, மறுபடி கிளறிவிட்டு, கடைசியாக சோம்புத் தூள் தூவிப் பரிமாறவும்.

* காய்கறிகளுக்கு பதில் காளான் மட்டுமே சேர்த்தும், இதே முறையில் கொத்து இடியாப்பம் செய்யலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum